புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நமது புதுக்கோட்டை நீர்நிலைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பல்லவன் குளம் உள்ளே தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு பணி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் எம். லியாகத்அலி, மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் பி.நாகராஜன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
டாக்டர் கார்த்திக், நகராட்சி அலுவலர் ஜெய்சங்கர், நகர திமுக துணைச்செயல் அப்புக்காளை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.செந்தில்வேல், நகரமன்ற உறுப்பினர்கள் எஸ் மூர்த்தி, பால்ராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக சேவகர் மேட்டுப்பட்டி செந்தில்கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, பல்லவன் குளம் உள்பகுதியில் உள்ள காலி பாட்டில்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. ஏற்பாடு களை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன்ராஜா செய்திருந்தார். முன்னதாக பள்ளிவிளை யாட்டுத்துறை ஆசிரியர் முத்துராமலிங்கம் வரவேற்றார். நிறைவாக பட்டதாரி ஆசிரியர் ஜெ.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Post Views: 718
Share this:
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Reddit (Opens in new window) Reddit
- Print (Opens in new window) Print




