Close
செப்டம்பர் 27, 2026 5:28 காலை

பணி நிறைவு பெற்ற வாகன பராமரிப்பு இயக்குனர்..!

வாகன பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புத் துறை இயக்குநர் கொ. செந்தில்வேல்

மதுரை:

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையானது, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுத் துறை வாகனங்களை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒரு சேவைத் துறையாகும்.

இத்துறையின் மூலம் முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை உடனுக்குடன் பழுது நிவர்த்தி செய்யும் பணிகள் நடக்கின்றன.

சென்னையில் நவீனரக வாகனங்களை பழுது நீக்கம் செய்தல் மற்றும் பராமரிக்க நவீனமயமாக்கப்பட்ட பணிமனை ஒன்றும் , இதர அரசுத் துறை வாகனங்களை பழுதுபார்ப்பதற்காக மாநிலம் முழுவதும் 19 அரசு தானியங்கிப் பணிமனைகளும், செயல்பட்டு வருகின்றன. இத்துறையின் இயக்குநராக கொ. செந்தில்வேல்
பணி புரிந்து வந்தார். சிறப்பாக பணிபுரிந்து வந்த நிலையில் 31.07.2025. அன்றுடன் பணிநிறைவு பெறுகிறார்.

அவருக்கு அரசுத்துறையில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top